பெகாசஸ் மூலம் பிரான்ஸ் அதிபரின் போன் உளவு பார்க்கப்பட்டதாக ?
பிரான்ஸ் நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரானின் தொலைபேசி எண் உளவு பார்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பெகாசஸ் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக உலகம் முழுவதும் பெரும் சர்ச்சைகள் எழுந்து வருகிறது. இந்த விவகாரத்தில் தினமும் புதுப்புது தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி பிரான்ஸ் நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரானின் தொலைபேசி எண் உளவு பார்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் அதிபர் இமானுவேல் மேக்ரானின் தொலைபேசி எண்களில் ஒன்றை, மொராக்கோ நாட்டு உளவுத்துறையால் பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்த்ததாக பிரான்ஸின் LE MONDE நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதிபரின் போனை உளவு பார்த்ததாக வெளியாகியுள்ள தகவல் தவறானது என மொராக்கோ தெரிவித்துள்ளது. மேலும், ஈராக், தென் ஆப்பிரிக்க , பாகிஸ்தான் பிரதமர் அதிபர் இம்ரான் கான் ஆகியோரின் எண்களும் உளவு பார்க்கப்பட்டுள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.