எங்களுக்கு ஆதரவு தெரிவித்த இந்தியாவிற்கு நன்றி…! இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ட்வீட்…!
இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர், தினேஷ் குணவர்தனா, ட்வீட்டர் பதிவால், இந்தியா இலங்கைக்கு ஆதரவாக செயல்பட்டது அம்பலமாகியுள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு இலங்கை போரின்போது நடந்த ஈழ இனப்படுகொலைக்கு எதிராக ஐ.நா குழு சமர்ப்பித்த அறிக்கையில், பத்தாண்டுகள் ஆகியும் இலங்கை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகையால், ஐ.நா. மனித உரிமை கூட்டத்தில் இனப்படுகொலை குற்றங்களைப் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு சென்றிடும் வகையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி உள்ளிட்ட 6 நாடுகள், ஐநா மனித உரிமை மன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்திருந்தது. இந்நிலையில், இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் நிறைவேறியுள்ளது. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை 22 நாடுகள் ஆதரித்தும், 11 நாடுகள் எதிர்த்தும் வாக்களித்துள்ளது. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா, நேபாளம், ஜப்பான், இந்தோனோஷியா உள்ளிட்ட 14 நாடுகள் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், இலங்கைக்கு இந்தியா மறைமுகமாக ஆதரவு தெரிவித்துள்ளதாக, பல அரசியல் பிரபலங்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர், தினேஷ் குணவர்தனா, தனது ட்வீட்டர் பக்கத்தில், ஜெனிவா மாநாட்டில் ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து பதிவிட்டிருந்தது. அதில் இந்தியாவையும் குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம் இந்தியா இலங்கைக்கு ஆதரவாக செயல்பட்டது அம்பலமாகியுள்ளது.
Sri Lanka???????? appreciates the support shown at Geneva by Bahrain???????? India???????? Japan???????? Nepal???????? Indonesia???????? Libya???????? Sudan???????? Namibia???????? Gabon???????? Togo???????? Mauritania???????? Senegal???????? Cameroon???????? Burkina Faso????????
— Dinesh Gunawardena ???????? (@DCRGunawardena) March 23, 2021