விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது என்று திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகிறது என திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்தாக கூறப்படுகிறது. மாஸ்டர் படம் தயாராகி 10 மாதங்கள் ஆகியும் ஓ.டி.டி.யில் வெளியிடாமல், திரையரங்கில் திரையிட ஒத்துழைப்பு வழங்கிய விஜய்க்கு நன்றி தெரிவித்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு திரையிடப்படும் என்று படத்தயாரிப்பாளர் அதிகாரப் பூர்வமாக தெரிவித்ததாக திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்புக்கு பின் வெளியாகும் மிகப்பெரிய படம் இது என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, திரையரங்குகளில் பார்வையாளர் அனுமதி 50% லிருந்து 100% ஆக அதிகரிக்க முதல்வர் பழனிசாமியிடம் நடிகர் விஜய் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
மாஸ்டர் படத்தை பொங்கலுக்காக ஜனவரி 13ல் வெளியிட திட்டமிட்ட நிலையில், நேற்று இரவு 10 மணிக்கு மேல் முதல்வர் வீட்டில் விஜய் சந்தித்து பேசியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், மாஸ்டர் படம் தயாரிப்பாளர் லலித்குமார் உள்ளிட்ட படக்குழு சந்திப்பில் அமைச்சர் எஸ்.பி வேலுமணியும் பங்கேற்றுள்ளார் என்பதும் குறிப்பிடப்படுகிறது.
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…
சென்னை : சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் T20 தொடரில், 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. சர்வதேச…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு விழா மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று…
சென்னை : பனையூரில் உள்ள த.வெ.க. தலைவர் விஜய் வீட்டிற்குள் செருப்பு வீசிய நபரால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இளைஞர்…
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நேற்று மாலை…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் இன்று…