பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய அனைவர்க்கும் நடிகர் தனுஷ் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தனது அசுர நடிபபால் உச்ச நட்சத்திரமாக உயர்ந்தவர் நடிகர் தனுஷ். இவரெல்லாம் ஹீரோவா என கூறிய தமிழ் சினிமாவை இவர்தான் ஹீரோ என நினைக்க வைத்தவர் நடிகர் தனுஷ். ஹீரோவிற்கு உண்டான இலக்கணங்களை உடைத்து தனிக்கென தனி பாணியில் பயணித்து வெற்றியும் கண்டு வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான கர்ணன் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.
புதுப்பேட்டை, ஆடுகளம், வடசென்னை, அசுரன், ஆகிய திரைப்படங்களில் தனது அட்டகாசமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருப்பார். இந்நிலையில், இன்று நடிகர் தனுஷ் தனது 38- வது பிறந்த நாளை கொண்டாடினார்.
அவருக்கு திரையுலக சார்ந்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். அனைவர்க்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், தனது ட்வீட்டர் பக்கத்தில் ” வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு நன்றி ” எனது பிறந்தநாளில் என்னை வாழ்த்த நேரம் ஒதுக்கிய ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றி” ஓம் நமச்சிவாய” என்று தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…