ஐ நா அமைதிப் படையினருக்கு கொரோனா தடுப்பூசியை இலவசமாக தந்ததற்கு நன்றி – ஐ நா பொது செயலாளர்!
ஐ நா அமைதிப் படையினருக்கு 2 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை இலவசமாக வழங்கியதற்காக இந்தியாவிற்கு ஐ நா பொதுச்செயலாளர் அன்டோனியா அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் வீரியம் மற்றும் அதன் தாக்கத்தைக் குறைப்பதற்காக இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள தடுப்பூசிகள் தற்பொழுது அவசரகால அனுமதிக்கு பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் தடுப்பூசிகள் இலவசமாகவும், விற்பனைக்கும் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஐநாவின் அமைதி படையினருக்கு அண்மையில் இந்தியா சார்பில் 2,00,000 கொரோனா தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டது. இதற்கு ஐ.நா பொதுச் செயலாளர் இந்தியாவிற்கு நன்றி தெரிவித்துள்ளதாக நிரந்தர இந்திய தூதர் திருமூர்த்தி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அதில் அமைதி படையினருக்கு 2 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை இலவசமாக இந்தியா வழங்கியதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு ஐநா பொதுச் செயலாளர் அண்டோனியா குட்டரெஸ் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் இந்தியா அதிக அளவில் கொரோனாவுக்கு கு எதிரான நடவடிக்கையில் உலக அளவில் தலைமைத்துவத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், 150க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருத்துவ பரிசோதனை கருவியான வென்டிலேட்டர் விநியோகித்து வருவது குறித்தும் இந்தியாவை பாராட்டியுள்ளார் என தெரிவித்துள்ளார்.