தடுப்பூசி ஏற்றுமதிகளை மீண்டும் தொடங்குவதாக அறிவித்ததற்கு நன்றி – WHO தலைவர்!
தடுப்பூசி ஏற்றுமதிகளை மீண்டும் தொடங்குவதாக அறிவித்ததற்கு நன்றி என WHO தலைவர் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.
வருகிற அக்டோபர் மாதம் முதல் இந்தியா தன்னிடம் உள்ள உபரி தடுப்பூசிகளை மீண்டும் ஏற்றுமதி செய்ய தொடங்கும் என நேற்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா அவர்கள் தெரிவித்திருந்தார். மேலும் நாட்டு மக்களுக்கு அதிக முன்னுரிமை கொடுத்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாகவும், இதுவரை 81 கோடிக்கும் அதிகமானோர் நாட்டில் தடுப்பூசி செலுத்தி உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது இது குறித்து பேசி உள்ள உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அவர்கள், மீண்டும் இந்தியா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய தொடங்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா அறிவித்துள்ளதற்கு நன்றி எனவும், இது இந்த வருட இறுதிக்குள் அனைத்து நாடுகளிலும் 40% தடுப்பூசி செலுத்த வேண்டும் எனும் இலக்கை எட்டுவதற்கு ஒரு முக்கியமான வழியாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.