ஜெய் பீம் மீதான உங்கள் அலாதியான அன்பிற்கு நன்றி என நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இயக்குனர் ஞானவேல் அவர்களின் இயக்கத்தில் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி கடந்த நவம்பர் 2 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிய தமிழ் திரைப்படம் தான் ஜெய்பீம். இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ளார். மேலும் பிரகாஷ்ராஜ், ரஜிஷா விஜயன், லிஜோமொள் ஜோஸ் ஆகியோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும் சில அரசியல்வாதிகள் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் அரசியல்வாதிகளின் எதிர்ப்பிற்கு கூட சூர்யாவின் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் சூர்யாவின் பக்கம் நின்று தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதற்கு நன்றி தெரிவித்து சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அன்பர்களே ஜெய்பீம் மீதான இந்த அன்பு அலாதியானது. இதற்கு முன் நான் இவ்வளவு அன்பை பார்த்ததில்லை. நீங்கள் அனைவரும் எனக்கு அளித்த நம்பிக்கை மற்றும் உறுதிப்பாட்டிற்கு நான் எவ்வளவு நன்றி உள்ளவனாக இருக்கிறேன் என்பதை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. என்னுடன் நின்றதற்கு மனமார்ந்த நன்றி என தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு,
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…