“சேவைபுரிவோருக்கு கைத்தட்டி நன்றி தெரிவிக்க வேண்டும்”- வானொலியில் பிரதமர் உரை!
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கொரோனா வைரஸை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், இந்த வைரஸ் தாக்கத்தால் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
எனவே கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து பிரதமர் மோடி வானொலியில் மக்களுக்கு உரையாற்றினார். அதில் அவர் வரும் 22ஆம் தேதி போலீஸ், ரயில்வே துறை, ஆட்டோ ஓட்டுநர் என பொது சேவை செய்யும் பலருக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும் என கூறினார்.