“நன்றி இறைவா” கர்நாடக முருதீசுவரர் கோவிலுக்கு சென்ற நடிகர் சிம்பு.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள முருதீசுவரர் திருக்கோவிலுக்கு நடிகர் சிலம்பரசன் சென்றுள்ளார்.
நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்,அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் மானாடு படத்தில் நடித்துமுடித்துள்ளார். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திரையரங்குகள் திறந்தவுடன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகும் நதிகளிலே நீராடும் சூரியன் என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தை தொடர்ந்து பத்து தல என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.
இதற்கிடையில், இதற்குத்தானே ஆசைப்பட்டா பாலகுமாரா இயக்குனர் கோகுள் இயக்கத்தில் ஒரு திரைப்படம் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் பரவிவருகிறது. இந்த நிலையில், தற்போது நடிகர் சிம்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள முருதீசுவரர் திருக்கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு அந்த புகைப்படத்தை தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டு “நன்றி இறைவா” என்று பதிவிட்டுள்ளார்.
Nandri Iraiva ????????#OmNamahShivaya #Atman #SilambarasanTR pic.twitter.com/WxU4b5KLhN
— Silambarasan TR (@SilambarasanTR_) August 1, 2021