மீண்டும் இணையும் தனி ஒருவன் ஜோடி.!

இயக்குனர் அஹ்மத் – நடிகர் ஜெயம் ரவி கூட்டணியில் உருவாகும் ஸ்பை த்ரில்லர் படமான ‘ஜன கண மன’ படத்தின் படப்பிடிப்பு எடுக்க வெளிநாடுகள் செல்ல இருப்பதால் படத்தை எடுக்க நீண்ட நாட்கள் ஆகும் என்பதால் அதற்கு முன்பு ஜெயம் ரவி மற்றும் அஹ்மத் மீண்டும் ஒரு படத்தில் இணைவுள்ளார். அதற்கான ஸ்கிரிப்டை பணியும் முடித்துவிட்டதாகவும், இந்த மாதம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சைக்கலாஜிக்கல் த்ரில்லராக உருவாகும் இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளார். இது குறித்து அகமது கூறுகையில், “நாங்கள் கொரோனா காரணமாக ஜன கண மன படத்தில் சில காட்சிகளை வெளிநாட்டில் எடுப்பதற்கு ஒரு பெரிய செட்யூலை திட்டமிட்டோம். சில பல காரணங்களால் அந்த இடைப்பட்ட காலத்தில், நான் வேறொரு ஸ்கிரிப்டைத் தயாரிக்கத் தொடங்கினேன், ஜெயம் ரவியை வைத்து எடுப்பதற்கு யோசனை தோணியது.
இதற்கு முன்பு நயன்தாரா ஜெயம் ரவிக்கு ஜோடியாக தனி ஒருவர் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையிலும், புதுச்சேரியிலும் படப்பிடிப்பை நடத்தபடும் என்றும் மே மாதத்திற்குள் இதை முடித்துவிட்டு, ஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் ஸ்பெயின் மற்றும் பல்கேரியாவுக்கு படப்பிடிப்புக்கு படக்குழு செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025