தனி ஒருவன் – 2 படத்திற்கான அப்டேட் விரைவில் வெளிவரும் என்று இயக்குநர் மோகன் ராஜா கூறியுள்ளார்.
2015ல் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் தனி ஒருவன். இந்த படத்தில் அரவிந்த் சாமி மாஸ்ஸான வில்லனாக நடித்து பிரமிக்க வைத்தார்.ஹிப்ஹாப் ஆதியின் இசையில் உருவான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் படம் 100 கோடி வரை வசூல் செய்து சூப்பர் ஹிட்டானது.
சமீபத்தில் இந்த படத்தின் செக்கன்ட் பார்ட் எடுக்க முடிவு செய்துள்ளதாக மோகன் ராஜா மற்றும் ஜெயம் ரவி ஆகிய இருவரும் வீடியோ மூலம் தெரிவித்தனர். அதனையடுத்து அதற்கான 90% பணிகள் முடிந்து விட்டதாகவும் , தான் கமிட்டாகியுள்ள அனைத்து படங்களையும் முடித்து விட்டு தனி ஒருவன் – 2ல் கவனம் செலுத்த போவதாகவும் ஜெயம் ரவி கூறியிருந்தார்.இந்நிலையில் தனிஒருவன் வெளியாகி நேற்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஹரிஷ் உத்தமன் தன்னை தனிஒருவன் படத்தில் ஒரு பகுதியாக மாற்றியமைக்கு நன்றி என்று கூறியதுடன் இரண்டாம் பாகம் குறித்தும் கேட்டுள்ளார். அதற்கு இயக்குநர் மோகன் ராஜா விரைவில் தனி ஒருவன் – 2 குறித்த அப்டேட் வெளிவரும் என்று தெரிவித்துள்ளார்.
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…
விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…