தமிழ் சினிமாவின் மிக முக்கிய பிரச்சனை பற்றி பேசிய இயக்குனர் பார்த்திபன்!
தமிழ் சினிமாவில் தனது வித்தியாசமான படைப்புகள் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் நடிகர் பார்த்திபன். இவர் இயக்கத்தில் இவர் மட்டுமே நடித்து அண்மையில் வெளியான திரைப்படம் ஒத்த செருப்பு. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இப்படம் சூர்யா நடித்த காப்பான் படத்துடன் ரிலீஸ் ஆனது. முதல் வாரம் காப்பான் படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. அடுத்ததாக ஒத்த செருப்பு படமும் மக்கள் மத்தியில் கவனிக்கப்பட்டது. அந்த படம் நன்றாக ஓட ஆரம்பித்த அடுத்த வாரமே சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் வெளியானது. அதனால் ஒத்த செருப்பு திரைப்படத்தை சில திரையரங்குகளில் தூக்கி விட்டனர். அக்டோபர் இரண்டாம் தேதி ஹிர்த்திக் ரோஷன் நடித்த வார் திரைப்படமும், சிரஞ்சீவி நடித்த சைரா நரசிம்ம ரெட்டி திரைப்படமும் வெளியானதால் ஒத்த செருப்பு திரைப்படம் நல்ல வரவேற்பு இருந்தும் பல திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டுவிட்டது.
இதனால் இயக்குனர் நடிகர் பார்த்திபன், திரை பிரபலங்கள், தியேட்டர் உரிமையாளர்கள்என பலரை அழைத்து பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். அப்போது அதில், பட ரிலீசில் ஒவ்வொரு படத்திற்கும் கால இடைவெளி இல்லாததால் மக்களிடம் ஒரு சில படங்கள் நல்ல வரவேற்ப்பை பெற்றும் தியேட்டர் கிடைக்காததால் அடுத்தடுத்து பெரிய படங்கள் வெளியாவதாலும் அந்த படங்கள் மக்களிடம் சேர முடியாத சூழல் உருவாகிவிட்டது. இது எனது படங்களுக்கு மட்டும் அல்ல மற்ற நல்ல படங்களும் இதே நிலைமை தான். என கருத்து தெரிவிக்கப்பட்டது.
இது தற்போது தமிழ் சினிமாவில் மிக முக்கிய பிரச்சனை இது தான். ஒரு படம் வெளியான முதல் வாரம் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்து விடுவர். அதற்கு அடுத்தடுத்த வாரங்கள் தான் குடும்பமாக தியேட்டர் வர ஆரம்பிப்பார்கள். ஆனால், அந்த சமயம் மற்ற பெரிய படங்கள் வருகையால் இந்த சிறிய படங்கள் தவிர்க்கப்படுகின்றன. இதனால் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் நல்ல படங்களுக்கு சரியான வரவேற்பு மக்கள் மத்தியில் கிடைக்காமலே தோற்கடிக்கப்பட்ட படங்களாக மாறுகின்றன. இந்த நிலைமையை சரி செய்ய தயாரிப்பாளர் சங்கத்தில் நல்ல முடிவுகளை எடுத்தால் மட்டுமே சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் நல்ல படங்களும் மக்களிடம் வரவேற்பு பெற்று நல்ல கலைஞர்கள் காப்பாற்றப்படுவார்கள்.