தீரன், கடைக்குட்டி சிங்கம், கைதி என நிதானமாக தொடர் வெற்றிகளை பதிவு செய்து வருகிறார் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் அடுத்ததாக உருவாகியுள்ள திரைப்படம் தம்பி. இந்த படத்தை பாபநாசம் பட இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார். இவர் மலையாள சினி உலகில் முக்கிய இயக்குனராவர்.
இப்படத்தில் ஜோதிகா கார்த்திக்கு அக்காவாக நடித்துள்ளார். சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து டிசம்பரில் படம் ரிலீசாக உள்ளது.
இப்படத்தின் டீசர் தற்போது ரிலீசானது. இதில் பல அடிதடி குற்றங்களில் ஈடுபடும் தம்பி கார்த்தி, தம்பியை தேடும் அக்கா ஜோதிகா என காட்சிப்படுத்தப்பட்டாலும் மலையாள சினிமா சாயலில் படம் உருவாகியுள்ளது என டீசரில் தெரிகிறது. படம் ரிலீசான பிறகுதான் தமிழ் ரசிகர்களை கவரும் வண்ணம் இருக்குமா என பார்க்கலாம். இப்படம் மலையாளத்திலும் ரிலீசாக உள்ளது.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…