மரம் இறைவன் அளித்த வரம்..! இந்த விருட்சங்களை வீட்டில் வளர்த்தால் வளம் கொழிக்குமா..?அப்பேற்பட்ட மரங்கள் பற்றி அறிவீர்களா..?

- மரங்களை தெய்வீக அம்சம் கொண்டதாக விருட்ச சாஸ்திரம் கூறுகிறது.
- அத்தகைய மரங்களில் மகிழமரம், பன்னீர் மரம்,குறுந்த மரம், அரிநெல்லி மரம் ஆகிய மரங்கள் தெய்வீக சக்தி வாய்ந்தவை அவைகளை குறித்த ஆன்மீக தகவலையும்- பலன்களை பற்றி அறிந்து கொள்வோம்.
மரம் தான் நீருக்கு ஆதாரம் நீர் இல்லையேல் பூமியில் எங்கும் பஞ்சமும் பட்டணியும் தலைவிரித்து ஆடும் அவலம் ஏற்படும் இதை தான் வள்ளுவரும் நீரின்றி அமையாது உலகு என்றும் கூறுகிறார்.
அத்தகைய நீருக்கு ஆதாரமாக இருப்பது மரம் மக்களின் தேவையை மட்டுமல்லாமல் நிவர்த்தி செய்யவில்லை ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.மேலும் ஆலயங்களில் எல்லாம் தல விருட்சமாகவும் உள்ளது.இதனால் தான் ஆலயங்களுக்கு சென்று வந்தால் மன அமைதியும்-நல்ல புத்துணர்ச்சியையும் தருவதை அனுபவம் மூலம் அறிந்திருப்போம்.
அத்தகைய மரங்களில் மகிழ மரம் காரைக்குடி அருகில் உள்ள மாத்தூரில் உள்ளது.இது ஒரு தெய்வீக மரம்.வீட்டில் இதனை வளர்ப்பதால் அதன் காற்றை சுவாசிக்கும் குழந்தைகளின் அறிவு வளர்ச்சி மிக நன்றாக வளரும்.
பன்னீர் மரத்தினை வீட்டில் வளர்த்தால் வாகனங்களை அதன் அருகில் நிறுத்தலாம்.இவ்வாறு செய்தவன் மூலம் வாகனத் தொல்லை,விபத்து ஏற்படாது,பன்னீர் தெளித்து வரவேற்கும் வாய்ப்பை ஏற்படுத்தும் ,அரசு மரியாதையும் கிடைக்கும்.
அதே போல் அரிநெல்லி மரத்தை லட்சுமி மரம் என்று கூறுவார்கள் இதை வீட்டில் வளர்த்தால் வறுமை அகலும்.வளமை கிடைக்கும்,வளர்பிறை,அஷ்டமி,தவறமால் வழிபாடு நல்லது.
குறுந்தமரத்தினை வீட்டில் வளர்பதால் வாஸ்து குறைபாட்டினை அகற்றும்.அதன் கிளை,இலை,வேர் இருந்தால் வீட்டில் வைப்பது நல்ல பலன்களை தரும்.வீட்டில் வேப்பம் மரம் வளர்ப்பது மிகவும் நல்ல பலனைத் தரும்.