இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் புதிய அவதாரம் எடுக்கும் ‘தலைவி’ பட நடிகை.!

Default Image

தலைவி பட நடிகையான கங்கனா ரணாவத் ராமர் கோவில் வழக்கை அடிப்படையாக கொண்டு படத்தை இயக்கி தயாரிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் மற்றும் ஹிந்தி சினிமாவில் நடித்து பிரபலமானவர் கங்கனா ரணாவத். இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம்தூம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதனையடுத்து ஹிந்தி பக்கம் சென்று முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தற்போது தமிழில் ஏ. எல். விஜய் இயக்கத்தில் ‘தலைவி’ என்ற ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்ட படத்தில் நடித்து வருகிறார். இவர் தற்போது ராமர் கோயில் வழக்கை மையமாக கொண்டு உருவாகவுள்ள ‘அபரஜிதா அயோத்யா’ என்ற படத்தினை இயக்கி தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து அவர் கூறுகையில், முதலில் இந்த படத்தை இயக்க வேண்டும் என்று நான் நினைக்கவே இல்லை, மிகவும் பிஸியாக இருந்ததால் அதனை பற்றி யோசிக்கவில்லை என்றும், இந்த படத்தை நான் தயாரித்து விட்டு வேறொருவரை வைத்து இயக்க நினைத்திருந்தேன். ஆனால் எனது நண்பர்கள் இந்த படத்தை நான் இயக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். எனக்கும் அது சரியாக தோன்றியதால் இந்த படத்தை நானே இயக்கி தயாரிப்பதாக கூறியுள்ளார். மேலும் இந்த படத்தில் நான் நடிக்காமல், இயக்குநராக மட்டுமே முழு கவனமும் செலுத்த விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். இவர் ஏற்கனவே ‘மணிகர்னிகா:தி குயின் ஆஃப் ஜான்சி என்ற ராணி லட்சுமி பாயின் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படத்தில் ஜான்சி ராணியாக நடித்து இயக்கியது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
TN Ration shop
Sunita Williams - NASA
TN CM MK Stalin - Sunita Williams
Putin - Trump - Zelensky
sunita williams
CSK vs MI Tickets open