மனம் மற்றும் நரம்பு மண்டலத்தை பாதுகாக்கும் தாளாசனம்…!!!
யோகா பயிற்சியின் மூலம் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை மட்டுமல்லாமல் புத்துணர்ச்சியையும் வரவழைத்து கொள்ளலாம். இப்போது மனம் மற்றும் நரம்பு மண்டலத்தை பாதுகாக்க தாளாசனம் செய்யும் முறை பற்றி பற்றி பார்ப்போம்.
செய்முறை :
முதலில் யோகா செய்வதற்கு விரிப்பு ஒன்றை விரித்து கொள்ள வேண்டும். முதலில் விரிப்பில் நேரா நின்று கொள்ளவும். பின்னர் குதிகால் தரையில் இருக்க உடலை மேல் நோக்கி உயர்த்தவும். கைகள் இரண்டையும் ஒன்றாக இணைத்தபடி மேலே படி மேலே தூக்கி உள்ளங்கைகள் மேலே பார்த்த படி இருக்கவும்.
உடல் எடை முழுவதும் குதிகாலில் தாங்கி இருக்கும் படி செய்ய வேண்டும். இந்த நிலையில் 10 வினாடிகள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வர வேண்டும். அந்த ஆசனத்தை 3 முறை செய்யலாம். கைகளை மேலே உயர்த்தும் பொது மூச்சை உள் இழுத்தும், ஆசனத்தின் போது இயல்பான மூச்சிலும், விடும் பொது வெளி மூச்சு இருக்க வேண்டும். குதிகால் வலி உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்ய கூடாது.
உடல் ரீதியான பலன்கள் :
நுரையீரல் மற்றும் நெஞ்சு பகுதிகள் பலம் பெரும். உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சீரடைந்து நரம்பு மண்டலம் வலிமை பெரும். புத்துணர்ச்சி மிகும். மன வலிமை கூடும். நிமிர்ந்த மிடுக்கான தோற்றம் கிடைக்கும்.
குணமாகும் நோய்கள் :
ஆஸ்துமா, கூன்முதுகு போன்ற நோய்களிலிருந்து முழுமையான விடுதலை பெறலாம்.
ஆன்மீக பலன்கள் :
இந்த தாளாசனம் செய்யும் போது மனம் ஒருமைப்படுகிறது. மன அமைதி கிடைக்கிறது.
எச்சரிக்கை :
இந்த ஆசனத்தை குதிகால் வலி உள்ளவர்கள் செய்ய கூடாது.