400 பேருக்கு “பிகில்” மோதிரம் வழங்கிய தளபதி விஜய் !
நடிகர் விஜய் , இயக்குனர் அட்லீ உடன் மூன்றாவது முறையாக இணைந்து உள்ள படம் “பிகில்” இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.இப்படத்திற்கு இசைப்புயல் ஏ . ஆர் ரகுமான் இசையமைத்து உள்ளார்.
இப்படத்தில் நயன்தாரா ,விவேக் ,யோகிபாபு ,மற்றும் கதிர் ஆகியோர் முக்கிய கதா பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
கடந்த சில நாள்களுக்கு முன் இப்படத்தில் இடம்பெற்ற “சிங்க பெண்ணே ” பாடல் வெளியானது.பிகில் படத்தின் படப்பிடிப்புகள் இம்மாதத்துடன் நிறைவடைய உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிகில் படத்தில் விஜய் நடிக்கும் காட்சிகள் நேற்றுடன் முடிவடைந்து உள்ளது.
இப்படத்தில் நடித்தவர்களுக்கு விஜய் அன்பு பரிசு கொடுத்து உள்ளார்.கால் பந்து வீரர்களாக நடித்த வீரர்களுக்கு தான் கையெப்பம் மிட்ட கால்பந்தை பரிசாகவும் , 400 பேருக்கு “பிகில் ” என பொறிக்கப்பட்ட தங்க மோதிரத்தை பரிசாக கொடுத்து உள்ளார்.