நடிகர் விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹேக்டே நடித்துள்ளார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், தற்போதெல்லாம் செய்தியாளர்கள் விஜய் படங்களுக்கு காத்திருக்கிறார்களோ இல்லையோ விஜய் பட இசை வெளியீட்டு விழாவிற் குதான் காத்திருக்கிறார்கள். ஏனென்றால் அந்த விழாவை விஜய் பேசுவார். ஏதேனும் அவருக்கு தோணும் , அவர் கடந்துவந்த சில அனுபவங்களை பகிர்வார். முக்கியமாக ரசிகர்களுக்கு குட்டி கதை ஒன்று கூறுவார்.
குறிப்பாக தெறி, மெர்சல், பிகில், சர்கார், மாஸ்டர் வரை அவர் பேசிய கருத்துக்கள் தற்போது வரை ரசிகர்களின் மனதில் இருக்கிறது. அந்த வகையில், அடுத்ததாக பீஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு ரசிகர்கள் காத்துள்ளனர்.
ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில், பீட்ஸ் படத்தின் இசை வெளியிட்டு விழா நடைபெறும் தேதி குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, பீஸ்ட் படத்தின் இசை வெளியிட்டு விழா வரும் 20-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விழாவில் ஏதேனும் அரசியல் சமூக கருத்து சொல்ல போகிறாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…