இயக்குனர் அட்லியை சந்தித்த தளபதி விஜய்.? காரணம் என்ன?வைரல் வீடியோ உள்ளே.!

Published by
Ragi

தளபதி விஜய் அவர்கள் இயக்குநர் அட்லியின் அலுவலகத்தில் சென்று விட்டு காரில் திரும்பும் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் தற்போது மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் .விரைவில் இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிலையில் விஜய்யின் அடுத்த படமான “தளபதி-65” படத்தை முதலில் முருகதாஸ் இயக்க உள்ளதாக கூறப்பட்டது .

ஆனால் அவர் ஒரு சில காரணங்களால் அப்படத்திலிருந்து விலக,தளபதி65 படத்தை இயக்குவதாக பல இயக்குனர்களின் பெயர்கள் அடிப்பட்டது .அதில் எஸ்ஜே சூர்யா ,மகிழ் திருமேனி, பேரரசு உள்ளிட்ட பலரின் பெயர்கள் அடிப்பட்டது.அதிலும் இயக்குனர் நெல்சன் அவர்கள் விஜய்யின் அடுத்த படத்திற்கான கதையை கூறியதாகவும் ,அது விஜய்க்கு பிடித்திருந்ததாகவும் கூறப்பட்டிருந்தது‌.

ஆனால் இதுவரை தளபதி 65 படத்தை இயக்குவது யார் என்பது உறுதி செய்யப்படாத நிலையில் தளபதி விஜய் அவர்கள் அட்லியின் அலுவலகத்திற்கு சென்று இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . ஏற்கனவே அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தெறி ,மெர்சல்,பிகில் ஆகிய படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் மீண்டும் இந்த கூட்டணி இணைகிறதா? தளபதி 65 படத்தை அல்லது 66 படத்தை அட்லி இயக்குவாரா என்ற கேள்விகள் தற்போது எழுந்து வருகிறது .அட்லி தற்போது ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.விஜய் அவர்கள் அட்லியின் அலுவலகத்தில் சென்று திரும்பும் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

 

Published by
Ragi

Recent Posts

“நான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன்.,” அமைச்சர் துரைமுருகன் பகிரங்க வருத்தம்!

“நான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன்.,” அமைச்சர் துரைமுருகன் பகிரங்க வருத்தம்!

சென்னை : திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அண்மையில் தனது தொகுதியான காட்பாடியில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் பேசுகையில், மாற்றுத்திறனாளிகள்…

1 hour ago

அமைச்சர் பொன்முடி பதவியில் திருச்சி சிவா! மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிவிப்பு!

சென்னை : திமுக அமைச்சர் பொன்முடி அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசுகையில், உடலுறவு குறித்து மறைமுகமாக இரு சமூகத்தை…

2 hours ago

தமிழிசையின் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறிய அமித் ஷா.!

சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்திருந்திருக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழிசை சௌந்தரராஜன் வீட்டிற்கு நேரில் சென்று…

2 hours ago

சர்ச்சை பேச்சு எதிரொலி! பொன்முடியின் திமுக துணை பொதுச்செயலாளர் பதவி பறிப்பு!

சென்னை : அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி, விலைமாது பெண் பற்றி கதை கூறினார்.…

2 hours ago

“இது என் கிரவுண்ட்.,” கே.எல்.ராகுலின் ‘மரணமாஸ்’ கொண்டாட்டம்! வைரலாகும் வீடியோ….

பெங்களூரு : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் , டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடின. இதில்…

3 hours ago

அமைச்சர் பொன்முடியின் ‘கொச்சை’ பேச்சு! “ஏற்றுக்கொள்ள முடியாது!” கனிமொழி கடும் கண்டனம்!

சென்னை : தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, அவர் பேசிய பேச்சுக்கள்…

3 hours ago