இயக்குனர் அட்லியை சந்தித்த தளபதி விஜய்.? காரணம் என்ன?வைரல் வீடியோ உள்ளே.!

தளபதி விஜய் அவர்கள் இயக்குநர் அட்லியின் அலுவலகத்தில் சென்று விட்டு காரில் திரும்பும் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் தற்போது மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் .விரைவில் இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிலையில் விஜய்யின் அடுத்த படமான “தளபதி-65” படத்தை முதலில் முருகதாஸ் இயக்க உள்ளதாக கூறப்பட்டது .
ஆனால் அவர் ஒரு சில காரணங்களால் அப்படத்திலிருந்து விலக,தளபதி65 படத்தை இயக்குவதாக பல இயக்குனர்களின் பெயர்கள் அடிப்பட்டது .அதில் எஸ்ஜே சூர்யா ,மகிழ் திருமேனி, பேரரசு உள்ளிட்ட பலரின் பெயர்கள் அடிப்பட்டது.அதிலும் இயக்குனர் நெல்சன் அவர்கள் விஜய்யின் அடுத்த படத்திற்கான கதையை கூறியதாகவும் ,அது விஜய்க்கு பிடித்திருந்ததாகவும் கூறப்பட்டிருந்தது.
ஆனால் இதுவரை தளபதி 65 படத்தை இயக்குவது யார் என்பது உறுதி செய்யப்படாத நிலையில் தளபதி விஜய் அவர்கள் அட்லியின் அலுவலகத்திற்கு சென்று இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . ஏற்கனவே அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தெறி ,மெர்சல்,பிகில் ஆகிய படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் மீண்டும் இந்த கூட்டணி இணைகிறதா? தளபதி 65 படத்தை அல்லது 66 படத்தை அட்லி இயக்குவாரா என்ற கேள்விகள் தற்போது எழுந்து வருகிறது .அட்லி தற்போது ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.விஜய் அவர்கள் அட்லியின் அலுவலகத்தில் சென்று திரும்பும் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
EXCLUSIVE VIDEO !!
Thalapathy At Dir @Atlee_dir office!????#Master @actorvijay#28YearsOfBelovedVIJAY pic.twitter.com/1HLAKq0y93— Actor Vijay Universe (@ActorVijayUniv) December 3, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
தெலுங்கானா சுரங்கப்பாதை விபத்து… உள்ளே சிக்கிய 8 பேரின் நிலமை என்ன? மீட்கும் பணி தீவிரம்!
February 23, 2025
இந்தியா – பாகிஸ்தான் போட்டி: சென்னை கடற்கரையில் சிறப்பு ஏற்பாடு.!
February 23, 2025
AUSvENG : ருத்ர தாண்டவம் ஆடிய ஆஸ்திரேலியா! போராடி தோற்ற இங்கிலாந்து!
February 22, 2025
மீண்டும் மீண்டுமா? அஜித்-ன் GBU புது அப்டேட்..! குழப்பத்தில் ரசிகர்கள்!
February 22, 2025