தளபதி படத்திற்கு இசையமைக்க காத்திருக்கும் பிரபல இசையமைப்பாளர்..?

Default Image

இசையமைப்பாளர் தமனிடம் நேரலையில் ரசிகர் ஒருவர் விஜய்யுடன் உங்கள் கூட்டணி எதிர்பார்க்கலாமா என்று கேட்டதற்கு, ஆம் கண்டிப்பாக எதிர்பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.

நடிகர் விஜய் மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் தனது 65-வது படத்தில் நடிக்கவுள்ளார். பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

மேலும் நடன இயக்குனராக ஜானி மாஸ்டர் பணியாற்ற உள்ளதாகவும், தளபதி-65 படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணியாற்ற உள்ளதாக அவர்களே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். மேலும் தளபதி 65 படத்தில் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில் முதன் முதலாக தளபதி 65 படத்தை இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்குவதாகவும், இசையமைப்பாளர் தமன் இசையமைப்பதாகவும் தான் இருந்தது ஆனால் சில காரணங்களால் நடக்கவில்லை. இதனை தொடர்ந்து இசையமைப்பாளர் தமனிடம் சமூக வலைத்தளத்தில் நேரலையில் போது ரசிகர் ஒருவர் விஜய்யுடன் உங்கள் கூட்டணி எதிர்பார்க்கலாமா என்று கேட்டதற்கு, ஆம் கண்டிப்பாக எதிர்பார்க்கலாம் என்று கூறியுள்ளார். ஒருமுறை கூட விஜய் படத்திற்கு இசையமைக்கவில்லை என்பதால் மிகவும் ஆர்வத்துடன் தமன் காத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்