தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் படக்குழுவினர் புதிய போஸ்ட்ர் ஒன்றை வெளியிட்டு தற்போது அது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் ஏன் இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத கதாநாயகர்களில் முக்கியமானவராக உயர்ந்து நிற்பவர் தளபதி விஜய். இவர் இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தற்போது கொரோனா பாதிப்பு இல்லாது இருந்திருந்தால் ரசிகர்கள் இன்றைய நாளை திருவிழா போல கொண்டாடி தீர்த்திருப்பார்கள். ஆனால் தற்போது சமூக வலைத்தளங்களில் ஹேஷ்டேக் மற்றும் போஸ்ட்ர்களை டிரெண்ட் செய்து கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.
அந்த வகையில் தளபதி பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களை கூறிய #HBDTHALAPATHYVijay என்ற ஹேஷ்டேக் 3.5மில்லியனுக்கு மேல் ட்வீட்களை பெற்று டிரெண்டிங்கில் உள்ளது. மேலும் தளபதி தற்போது நடித்து முடித்துள்ள மாஸ்டர் படக்குழுவினர் இணைந்து பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்ட்ரை வெளியிட்டு வாழ்த்துகளை கூறி வருகின்றனர். மேலும் பல பிரபலங்களும், கோடிக்கணக்கான ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் தளபதிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…