தளபதி விஜய் பிரபல இயக்குநரான மணிரத்னம் அவர்களின் பொன்னியின் செல்வன் படத்தை நழுவ விட்டதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி இயக்குநர்களில் ஒருவர் தான் மணிரத்னம். தற்போது இவரது இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, அதிதிராவ் ஹைத்ரி, அஸ்வின், ஜெயராம், சரத்குமார், கிஷோர், ரியாஸ்கான், லால், மோகன் ராமன் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடிப்பது குறிப்பிடத்தக்கது. 2010ஆம் ஆண்டே இந்த படத்தின் பணிகளை தொடங்கினாராம்.அதனையடுத்து ஒரு சில காரணங்களால் தள்ளி போய் விட்டதாம்.
இந்த நிலையில் தற்போது மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றி வந்த தனா பொன்னியின் செல்வன் படத்தினை குறித்து யாரும் அறியாத தகவலை கூறியுள்ளார். அதில் இந்த படத்தில் நடிப்பதற்காக விஜய் மற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபுவிடம் தான் முதலில் அணுகியதாக கூறியுள்ளார். தளபதி இப்படி ஒரு சூப்பர் ஹிட் படத்தை நழுவ விட்டார் என்பது சோகமான விஷயமாகும். தளபதி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…