தளபதி 65 திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ரஷ்மிகா நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் தளபதி விஜய் வெளியான மாஸ்டர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார் . மேலும் நடன இயக்குனராக ஜானி மாஸ்டர் பணியாற்ற உள்ளார் .
இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற மார்ச் மாதம் முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக பல ஹீரோயின்களின் பெயர்கள் அடிப்பட்டது. அதிலும் பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இதனை தொடர்ந்து தற்போது இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ரஷ்மிகா நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இதனை குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வருகின்ற மார்ச் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…
சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…