தளபதி – 65ன் ஹீரோயின் யார் தெரியுமா.! செம குஷியில் ரசிகர்கள்.!

Default Image

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் தளபதி – 65 படத்தில் ரஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான அனைத்து படங்களும் அதிக அளவில் வசூலை பெற்று சாதனையும் படைத்தது. தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். தளபதியின் ரசிகர்கள் மாஸ்டர் படத்திற்காக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

மேலும் விஜய்யின் 65வது படத்தை இயக்க போவது யாரு என்ற சர்ச்சை நிலவி வந்த நிலையில், இயக்குநர் முருகதாஸ் தான் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க போவதாகவும் தகவல் வெளியானது.மேலும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும், எஸ். தமன் இசையமைக்கவுள்ளதாகவும், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்வதாகவும் கூறப்படுகிறது.இந்த நிலையில் தற்போது தளபதி – 65ல் விஜய்க்கு ஜோடியாக தென்னிந்திய சினிமாயுலகின் கனவு கன்னியாக வலம் வரும் ரஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இதனை குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ரஷ்மிகா மந்தனா கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்