பிரபல இயக்குநரிடம் தளபதி இப்படி கேட்டாராம்.! அவரே கூறிய சுவாரஸ்யமான தகவல்.!

Published by
Ragi

தளபதியின் யூத் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய மிஷ்கினிடம் அவரே முன் வந்து இப்படி கேட்டதாக மிஷ்கின் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான அனைத்து படங்களும் அதிக அளவில் வசூலை பெற்று சாதனையும் படைத்தது. தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். தளபதியின் ரசிகர்கள் மாஸ்டர் படத்திற்காக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்ட இந்த படத்தின் ரிலீஸ் தீபாவளிக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரான மிஷ்கின் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தளபதியை குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்றை கூறியுள்ளார். ஆரம்ப காலகட்டத்தில் இயக்குநர் மிஷ்கின் உதவி இயக்குநராக பணியாற்றி கொண்டே ஒரு சில படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த வகையில் விஜய்யின் யூத் படத்தில் இவர் உதவி இயக்குநராக பணியாற்றிய போது, விஜய்யிடம் பேசியதே இல்லை என்றும், ஏன் என்னிடம் எல்லாம் பேசமாட்டீங்களா என்று அவரே என்னிடம் வந்து கேட்டதாகவும் மிஷ்கின் கூறியுள்ளார்.

Published by
Ragi

Recent Posts

வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும்! வானிலை ஆய்வு மையம் அலர்ட்!

வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும்! வானிலை ஆய்வு மையம் அலர்ட்!

சென்னை : சென்னை வானிலை ஆய்வு மையம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வெப்ப நிலை உயரும் எனவும் எச்சரிக்கை கொடுத்து தகவலை…

1 hour ago

டப்பா ரோலுக்கு ஆண்டி ரோலே மேல்..சீண்டிய நடிகைக்கு சிம்ரன் கொடுத்த பதிலடி!

சென்னை : 90 ஸ் காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த நடிகை சிம்ரன் இப்போது ஹீரோயினாக இல்லாமல் நல்ல கதையம்சம் கொண்ட…

1 hour ago

விலகல் முடிவில் உறுதியாக இருக்கும் துரை வைகோ…ஏற்க மறுக்கும் மதிமுக தலைமை!

சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக நேற்று அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்திருந்தார். அவர்…

3 hours ago

திமுக கூட்டணியில் பாமகவா? முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்ன பதில்?

சென்னை : தமிழ்நாடு சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில் எந்த கட்சி எந்தெந்த கட்சிகளோடு கூட்டணி வைக்கபோகிறது என்பதற்கான கேள்விகளும்…

3 hours ago

இன்னைக்கு தான் நிஜ ஐபிஎல்! சென்னைக்கு பதிலடி கொடுக்குமா மும்பை?

மும்பை : ஐபிஎல் போட்டிகள் என்றாலே சென்னை மற்றும் மும்பை போட்டி நடைபெறுகிறது என்று சொன்னாலே போதும் அதற்கென்று தனி ரசிகர்கள்…

4 hours ago

தம்பி இது தீர்வு இல்லை…தற்கொலை செய்ய முயற்சி செய்த இளைஞர்..போலீசாரின் செயல்?

கேரளா : மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னானி பகுதியில், புதிய பாலத்தின் மேல் நின்று ஒரு இளைஞர் ஆத்மஹத்யா செய்து…

5 hours ago