தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த தளபதி.! முழு விவரம் உள்ளே.!

விஜய் அவர்கள் தனது பிறந்தநாளை இந்த வருடம் கொண்டாட வேண்டாம் என்று தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் விஜய். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான அனைத்து படங்களும் அதிக அளவில் வசூலை பெற்றது மட்டுமில்லாமல் பிளாக் பஸ்டர் ஹிட்டுமானது. தற்போது இவர் நடித்து வரும் திரைப்படம் மாஸ்டர்.இந்த படத்தை மாநகரம், கைதி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லனாகவும் , சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷன், தீனா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத்தின் இசையமைப்பில் வெளியான அனைத்து பாடல்களும் டிரெண்டிங்கில் உள்ளது. ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரவிருந்த இந்த படம் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது விஜய் ரசிகர்கள் காத்திருக்கும் ஒரே விஷயம் இப்படத்தின் ரிலீஸ் மற்றும் டீசர் தான். சமீபத்தில் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கிய நிலையில், படத்தை கொரோனா தொற்று முடிவுக்கு வந்ததும் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இவரது பிறந்தநாளை கொண்டாட ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். கடந்த மாதமே அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் விஜய் ரசிகர்கள். ஆம் தளபதியின் பிறந்தநாளை கொண்டாட காமன்டிபி, ஹேஷ்டேக் என உருவாக்கி பெரும் எதிர்பார்ப்பில் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் தற்போது விஜய் அவரது ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் கொரோனா தாக்கம் அதிகமாக இருக்கும் இந்த இக்கட்டான சூழ்நிலைகளில் தன் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்றும், ரசிகர்களிடம் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்றும் கூறியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. ஆனால் இது குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025