தளபதி 67 படத்தை இயக்கும் வெற்றிமாறன்…?? அவரே கூறிய தகவல்..!!
இயக்குனர் வெற்றி மாறன் விஜய்யை வைத்து ஒரு திரைப்படம் இயக்குவதாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனராக வளம் வருபவர் இயக்குனர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்று தேசிய விருது பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்தாக இயக்குனர் வெற்றி மாறன் நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதியை வைத்து நாவலை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தை தொடர்ந்து ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஒரு திரைப்படமும் அடுத்ததாக சூர்யாவை வைத்து வாடிவாசல் என்ற படத்தையும், அதற்கு பிறகு வடசென்னையை மையமாக வைத்து ஒரு வெப் சீரியஸ் ஒன்றையும் இயக்குவதாக நேரக்கனால் மூலம் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் ஒரு திரைப்படம் இயங்குவதாகவும் கூறியுள்ளார். அதற்கான வீடியோவும் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக விஜயின் 67 வது படத்தை இயக்குனர் வெற்றி மாறன் தான் இயக்குவார் என்று கூறி வருகின்றார்கள்.
Director #VetriMaaran line-up
1. Soori – #VijaySethupathi movie
2. RS Infotainment film
3. #Vadivaasal with #Suriya
4. #Vadachennai prequel web series5. #Thalapathy Vijay – Vetrimaaran film might be (#Thalapathy67) pic.twitter.com/mxWIkc5xfS
— Karthik Ravivarma (@Karthikravivarm) March 28, 2021