தளபதி 66 அனைவருக்கும் கண்டிப்பாக பிடிக்கும் என வம்சி பைடிபல்லி கூறியுள்ளார்.
இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது “பீஸ்ட்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.
இப்படத்தில் செல்வராகவன், சைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், லில்லிபட் பரூக்கி போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பை முடித்து விட்டு படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், விஜயின் 66-வது படத்தை இயக்குனர் வம்சி பைடிபல்லி இயங்குவதாகவும், படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தில் ராஜு தயாரிக்க வுள்ளதாகவும் நேற்று அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, ஊடகத்திற்கு பேட்டியளித்த வம்சி பைடிபல்லி கூறியதாவது “தளபதி 66 படம் குறித்து அறிவிக்க இது சரியான நேரம் என்று நாங்கள் நினைத்தோம்.படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று என்னால் உறுதியளிக்க முடியும். தளபதி விஜய் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். இது எனக்கு புதிய அனுபவம். இந்த படம் குறித்த மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்” என தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று முதலே பிறந்தநாள் கொண்டாட்ட…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இடையேயான வெள்ளை மாளிகையில் நடந்த…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி, ஆளுநர்…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில் நேற்று, ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்ற போட்டி மழை காரணமாக…
மும்பை : மாதந்தோறும் 1ம் தேதி எல்பிஜி சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், இன்று சென்னையில் வணிக…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…