தளபதி 65 அப்டேட் கொடுத்த ஷைன் டாம் சாக்கோ.!!

Default Image

தளபதி 65 படத்தின் கலந்துரையாடல்களுக்காக நான் சென்னை வந்துள்ளேன் என்று ஷைன் டாம் சாக்கோ தெரிவித்துள்ளார். 

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகும் தளபதி 65 படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜார்ஜியாவில் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை வந்தனர்.

இந்நிலையில், படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறவுள்ளது. அதற்காக பிரம்மாண்டமான ஷாப்பிங் மால் செட் அமைக்கும் வேலையில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது. இந்த ஷாப்பிங் மால் செட்டை அயல்நாட்டு ஷாப்பிங் மால்களுக்கு இணையாக அமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் தெலுங்கு நடிகரும் உதவி இயக்குனருமான ஷைன் டாம் சாக்கோ தளபதி 65 படத்தை பற்றி சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் ” தளபதி 65 படத்தின் கலந்துரையாடல்களுக்காக நான் சென்னை வந்துள்ளேன். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பின்  ஏற்கனவே ஜார்ஜியாவில் முடிந்துவிட்டது. அடுத்த அட்டவணை விரைவில் தொடங்கப்பட வேண்டும் என்று நினைக்கிறேன், ஏனெனில் கொரோனா  கட்டுப்பாடுகள் இல்லை. இப்போது படகுழு அடுத்த கட்ட படப்பிடிப்பை ஜூன் மாதத்தில்  நடத்த யோசித்து வருகிறது” என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்