“பான் இந்தியா” திரைப்படமாக உருவாகும் தளபதி 65..!

விஜய் நடிப்பில் உருவாகவுள்ள தளபதி 65 திரைப்படம் பான் இந்தியா படம் என்று படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றவுள்ள மனோஜ் பரமஹம்சா தெரிவித்துள்ளார்.
விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் மக்களு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறதை. இதுவரை உலகம் முழுவதும் 253 கோடி வசூல் செய்துள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயங்குவதாகவும் சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானது. இந்த படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக அன்பறிவ் பணியாற்றவுள்ளார். ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணியாற்றவுள்ளார்.
மேலும் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். வில்லனாக நடிகர் நவாசுதீன் சித்திகி நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற மார்ச் மாதம் 2 வது வாரத்தில் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இத்தனை தொடர்ந்து தற்போது விஜய் ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில், ஒரு அப்டேட் கிடைத்துள்ளது. ஆம் தளபதி 65 திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாம். இதனை படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றவுள்ள மனோஜ் பரமஹம்சா தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளர்.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025
“விருப்பமில்லாமல் செய்தால் தான் அது பாலியல் வன்கொடுமை” சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு!
February 28, 2025