தளபதி விஜய் அடுத்ததாக நடிக்கவிருக்கும் தளபதி-65 படத்தின் டைட்டிலை தமிழ் புத்தாண்டு அன்று வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று சூப்பரான வசூல் செய்து வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து தனது 65 வது படத்தில் நடிகர் விஜய் நடிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கவுள்ளார். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற மார்ச் மாதம் 2-வது வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் இரண்டு ஹீரோயின்கள், இரண்டு வில்லன்கள் என்று சமூக வலைத்தளத்தில் செய்திகள் நாளுக்கு நாள் பரவி வருகிறது. காமெடி கலந்த சிறந்த கேங்க் ஸ்டார் படமாக உருவாகவுள்ள இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு விஜய் ரசிகர்களுக்கிடையே எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்திற்கான டைட்டில் வருகின்ற ஏப்ரல் 14 ஆம் தேதி அதாவது தமிழ்புத்தாண்டு அன்று வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.இது எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.இருப்பினும் இந்த தகவல் தளபதி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…