தளபதி-65 படத்தின் படப்பிடிப்பு வரும் 15-ம் தேதி முதல் ரஷ்யாவில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தளபதி விஜய் மாஸ்டர் படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் தனது 65-வது படத்தில் நடிக்கவுள்ளார்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைக்கவுள்ளார் .
மேலும் நடன இயக்குனராக ஜானி மாஸ்டர் பணியாற்ற உள்ளதாகவும், தளபதி-65 படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணியாற்ற உள்ளதாக அவர்களே அதிகாரப்பூர்வமாக தங்களது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார்கள்.மேலும் ஹீரோயினாக நடிக்க வைக்க பூஜா ஹெக்டேயிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் தளபதி 65 படத்தினை குறித்து தற்போது வெளியான தகவலின்படி,தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு மார்ச் 15-ம் தேதி ரஷ்யாவில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .இது ஒருபுறம் இருக்க மறுபுறம்,வரும் 15-ம் தேதி தளபதி 65 படத்தின் பூஜை நடைபெற உள்ளதாகவும்,அதனை தொடர்ந்து ஏப்ரல் முதல் வாரத்தில் படப்பிடிப்பை தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் வெளியாகியுள்ளது.இதில் எது உண்மை என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் தான் தெரிய வரும்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…
டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…
சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…
டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…