தளபதி 65… மீண்டும் இணையும் தெறி கூட்டணி…!
விஜய்யின் 66-வது படத்தினை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பது கிட்ட தட்ட உறுதியாகிவிட்டாதாகவும் படத்தை அட்லீ இயக்கவுள்ளார்.
நடிகர் விஜய் நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளியான மாஸ்டர் ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பை பெற்று வருகிறது . இந்த திரைப்படத்தை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் தனது 65-வது படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைக்கவுள்ளார் .இந்த படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற மார்ச் மாதம் முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து விஜய்யின் 66-வது படத்தினை இயக்க போவது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அந்த வகையில் தளபதி விஜயின் 66 வது படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பது கிட்ட தட்ட உறுதியாகிவிட்டாதாகவும் படத்தை அட்லீ இயக்கவுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.