தளபதி விஜயின் அடுத்த பட இயக்குனர் யார்!? தளபதி-65 உண்மை நிலவரம் என்ன?!
நேற்று முழுக்க இணையத்தில் தளபதி விஜயின் 65வது திரைபடத்தை தடம் பட இயக்குனர் மகிழ் திருமேனி தான் இயக்குகிறார் என செய்திகள் உலா வந்தன. இந்நிலையில் உண்மை நிலவரம் என்னவென்றால், தளபதி விஜய் தற்போது புதிய இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறாராம்.
அதன் படி மகிழ் திருமேனி, கார்த்திக் நரேன் ( துருவங்கள் பதினாறு இயக்குனர் ), அருண்ராஜா காமராஜா ( கானா இயக்குனர் ) ஆகியோரிடம் கதை கேட்டுள்ளாராம்.
இதற்கிடையில் இயக்குனர் பேரரசுவிடமும் ஒரு கதையை கேட்டுள்ளதாகவும் அந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் தளபதி 65 படத்தின் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.