விஜய் நடிப்பில் உருவாகவுள்ள தளபதி 65 படத்திற்கான டீசர் வருகின்ற விஜய் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழுவினர் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகின்ற நிலையில், அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு ஏப்ரல் அல்லது மார்ச் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது.
அதற்கு பிறகு இந்த தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே, ரஷ்மிகா மந்தனா, நடிப்பதாகவும் விஜய்க்கு வில்லனாக நடிகர் அருண் விஜய் மற்றும் ராமசந்திர ராஜி நடிப்பதாக தகவல் மட்டுமே பரவி வருகிறது வேறொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்கும் நடிகர் குறித்த தகவல்க ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது அது என்னவென்றால், தளபதி 65 படத்தில் விஜய்க்கு வில்லனாக துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்த வித்யுத் ஜம்வால் நடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
அதனை தொடர்ந்து இந்த படத்திற்கான படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதி பூஜையுடன் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்திற்கான டீசர் வருகின்ற ஜூன் 22 விஜய் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழுவினர் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…