தளபதி 65…விஜய்க்கு வில்லனாகும் துப்பாக்கி பட வில்லன்..?
தளபதி 65 திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்த வித்யுத் ஜம்வால் நடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகின்ற நிலையில், அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு ஏப்ரல் அல்லது மார்ச் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது.
அதற்கு பிறகு இந்த தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே, ரஷ்மிகா மந்தனா, நடிப்பதாகவும் விஜய்க்கு வில்லனாக நடிகர் அருண் விஜய் மற்றும் ராமசந்திர ராஜி நடிப்பதாக தகவல் மட்டுமே பரவி வருகிறது வேறொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்கும் நடிகர் குறித்த தகவல்க ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது அது என்னவென்றால், தளபதி 65 படத்தில் விஜய்க்கு வில்லனாக துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்த வித்யுத் ஜம்வால் நடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.