தளபதி 65 படத்தின் புதிய அட்டகாசமான போஸ்டர்.!!
தளபதி 65 படத்திற்காக ரசிகர்கள் எடிட் செய்த அட்டகாசமான போஸ்டர் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கான பூஜை கடந்த மாதம் 31 ஆம் தேதி நடைபெற்றது.
அதனை தொடர்ந்து படத்திற்கான படப்பிடிப்பு கடந்த 9 ஆம் தேதி ஜார்ஜாவில் தொடங்கப்பட்டது. தற்போது படத்திற்கான படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விஜய் ரசிகர்கள் தளபதி 65 படத்திற்கான அட்டகாசமான போஸ்டர் ஒன்றை எடிட் செய்து வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டர் தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Here is my Fan made Edit for #Thalapathy65 ❤☺ @actorvijay @hegdepooja @Nelsondilpkumar @anirudhofficial @Vijay65FilmPage @VijayTrendsPage pic.twitter.com/OtrZpOxovQ
— Madhumitha (@iTzz_Madhu) April 11, 2021