தளபதி 65 படத்தின் புதிய லேட்டஸ்ட் அப்டேட்..!!

Published by
பால முருகன்

தளபதி 65 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வருகின்ற ஜூன் மாதம் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகும் தளபதி 65 படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜார்ஜியாவில் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை வந்தனர்.

இந்நிலையில், படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறவுள்ளது. அதற்காக பிரம்மாண்டமான ஷாப்பிங் மால் செட் அமைக்கும் வேலையில் படக்குழு தீவிரமாக இறங்கி செட் அமைத்து வந்த நிலையில், தற்போது கொரோனா 2 வது அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால் நடிகர் விஜய் படத்திற்கான இரண்டாவது கட்ட படப்பிடிப்பை கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்த பிறகு நடத்துவோம் என்று கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படக்குழு தளபதி 65 படத்திற்கான இரண்டாவது கட்ட படப்பிடிப்பை ஜூன் மாதம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜீன் மாதம் தொடங்கி டிசம்பர் செப்டம்பர் மாதத்தில் முடித்து விட்டு படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளியீட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

53 mins ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

55 mins ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 hour ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

1 hour ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

1 hour ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

2 hours ago