தளபதி 65 படத்தின் ஓப்பனிங் பாடல் தரலோக்கலான இசையுடன் இருக்கும் என்றும் அந்த பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளதாகவும் தகவல்
விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் 50 நாட்களுக்கு மேலாக இன்னும் சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்த வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக விஜய் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைக்க உள்ள இந்த படத்திற்கான பூஜை இந்த மாதம் நடைபெறும் என்றும் ஏப்ரல் அல்லது மே மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் படத்தில் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணியாற்ற உள்ளதாகவும், நடன இயக்குனராக ஜானி மாஸ்டர் பணியாற்ற உள்ளதாகவும், அவர்களே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். இந்த படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற ஏப்ரல் மாதம் ரஷ்யாவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் முதல் பாடல் தரலோக்கலான இசையுடன் இருக்கும் என்றும் அந்த பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மாஸ்டர் படத்தின் ஓப்பனிங் பாடலான வாத்தி கம்மிங் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வரும் நிலையில், தளபதி 65 ஓப்பனிங் பாடலிற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளார்கள்.
சென்னை : இன்று விக்ரம் நடிப்பில் உருவாகியிருந்த வீர தீர சூரன் திரைப்படம் உலகம் முழுவதும் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில்…
சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்கான விஷயமாக உள்ள நிலையில், அதில் இன்னும் பரபரப்பை…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏற்கனவே இந்த சீசனின் தொடக்கத்தில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக 286 ரன்கள் குவித்து மற்ற…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முக்கிய தீர்மானம் ஒன்றை முன்மொழிந்தார். மத்திய அரசு விரைவில் தாக்கல்…
டெல்லி : விக்ரம் நடிப்பில் உருவாகியிருந்த வீர தீர சூரன் திரைப்படம் இன்று மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகவிருந்த நிலையில் திடீரென…
தூத்துக்குடி : எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, கடந்த சில ஆண்டுகளாக ஓ.பி.எஸ் தரப்புடன் ஏற்பட்ட மோதல்களால் தனியாக பிரிந்து…