தளபதி 65 படத்தை தவற விடக்கூடாது என்று முடிவு செய்தேன் – பூஜா ஹெக்டே..!!
ளபதி விஜய்க்கு ஜோடியாக நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று நடிகை பூஜா ஹெக்டே சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கான பூஜை கடந்த மாதம் 31 ஆம் தேதி நடைபெற்றது. மேலும் படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற மே மாதம் 3 ஆம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் நடிகை பூஜா ஹெக்டே சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் படத்தை பற்றி கூறுகையில், ” தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் பறப்பது போல் உணர்கிறேன். படத்தின் கதையை நான் கேட்டபோது படத்தை தவறவிடக்கூடாது என்று முடிவு செய்தேன். கண்டிப்பாக இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடுவீர்கள். படத்தின் கதை மாஸ் என்றும் கூறியுள்ளார்.