தளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ‘தளபதி 65’ ஃபர்ஸ்ட் லுக்.??

ஜூன் 21 ஆம் தேதி மாலை 6 மணிக்கு ‘தளபதி 65’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படம் “தளபதி 65”. இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.
படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் முடிவடைந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு கொரோனா பரவல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. விரைவில் மீண்டும் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், வருகின்ற ஜூன் 22 ஆம் தேதி விஜய் பிறந்த நாள் என்பதால் ரசிகர்கள் அனைவரும் தளபதி 65 அப்டேட் வெளியாகுமா என்று காத்துள்ளநிலையில், தற்போது ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில், புதிய தகவல் வைரலாகி வருகிறது. அதாவது தளபதி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற ஜூன் 21 ஆம் தேதி மாலை 6 மணிக்கு படக்குழுவினர் வெளியீடவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025