தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு தளபதி 65 பர்ஸ்ட் லுக்..??
தளபதி 65 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற விஜய் பிறந்த நாள் ஜூன் 22 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகும் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜார்ஜியாவில் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை வந்தனர்.
இந்நிலையில், படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறவுள்ளது. அதற்காக பிரம்மாண்டமான ஷாப்பிங் மால் செட் அமைக்கும் வேலையில் படக்குழு தீவிரமாக இறங்கி செட் அமைத்து வந்த நிலையில், தற்போது கொரோனா 2 வது அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால் நடிகர் விஜய் படத்திற்கான இரண்டாவது கட்ட படப்பிடிப்பை கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்த பிறகு நடத்துவோம் என்று கூறியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து தற்போது தளபதி 65 படத்தின் லேட்டஸ்ட் தகவல் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. அது என்னவென்றால் தளபதி 65 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற விஜய் பிறந்த நாள் ஜூன் 22 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.