தளபதி ரசிகர்களுக்கு புத்தாண்டில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்!? தளபதி 64 மாஸ் அப்டேட்!

Default Image

தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக புதிய படம் தயாராகி வருகிறது. விஜயின் 64வது படமாக உருவாக உள்ள இந்த படத்தை கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது டெல்லியில் வேகவேகமாக நடந்து வருகிறது.
தற்போது இப்படத்தில் விஜய் சேதுபதி, சந்தனு, ஆண்டனி வர்கீஸ் என 3 வில்லன்கள் நடித்து வருகின்றனர் என கூறப்படுகிறது. மாளவிகா மோகனன் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். மேலும், VJ ரம்யா, சஞ்சீவ், ஸ்ரீநாத், சேத்தன், 96 ஜானு, பவி டீச்சர் என பலர் நடித்து வருகின்றனர்.
இப்படம் அடுத்த வருட ஏப்ரலில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு அடங்கிய முதல் போஸ்டர் புத்தாண்டு தினத்தன்று வெளியாக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்