அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக டெல்லி சென்ற படக்குழு! விஜய் – விஜய் சேதுபதியின் மாஸ் சண்டை காட்சி அப்டேட்!
தளபதி விஜய் அடுத்ததாக கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இப்படம் விஜயின் 168வது படமாக உருவாக உள்ளது. இப்படத்தை சேவியர் பிரிட்டோ என்பவர் தயாரிக்கிறார்.
இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோஹனன், சாந்தனு, ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா என பலர் நடிக்க உள்ளனர். அனிருத் இசையமைக்க உள்ளார்.
இப்படத்தின் ஷூட்டிங் சென்னையில் நிறைவு பெற்று இன்று முதல் டெல்லியில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இதில் தான் விஜய் சேதுபதி கலந்துகொள்ள உள்ளாராம். நவம்பர் 8ஆம் தேதி முதல் இப்படத்திற்க்கான ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட உள்ளனராம். இதில் விஜய்யும் , விஜய் சேதுபதியும் மோதிக்கொள்ளும் அதிரடி சண்டை காட்சி பட மாக்கபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.