ஆயுத பூஜை அன்று தளபதி 66 பூஜை..? உற்சாகத்தில் ரசிகர்கள்.!

Default Image

தளபதி 66 படத்தின் பூஜை நடைபெறும் தேதி குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் “பீஸ்ட்” படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. படத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படம் விறு விறுவென்று நடந்து கொண்டிருக்கும் நிலையில், அடுத்ததாக தளபதி 66- குறித்த தகவலும் அவ்வப்போது வைரலாகி வருகிறது. அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜயின் 66-வது படத்தை பிரபல தெலுங்கு இயக்குனரான வம்சி பைடிபல்லி இயங்குவதாகவும், படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பதாகவும் தகவல் பரவி வந்தது.

இந்நிலையில், தற்போது கிடைத்த தகவலின் படி, கிட்டத்தட்ட தளபதி 66 படத்தை வம்சி பைடிபல்லி இயக்குவது உறுதியாகிவிட்டதாகவும், இப்படத்தின் பூஜை வரும் ஆயுத பூஜை (அக்டோபர்) 14-ஆம் தேதி நடைபெறவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றார்கள். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்