அனிருத் இசையில் 2020 கோடை கொண்டாட்டமாக “தளபதி64” -அறிவிப்பு..!
அட்லி இயக்கத்தில் விஜய் தற்போது நடித்துள்ள படம் “பிகில்” இப்படத்தில் நயன்தாரா , விவேக் , டேனியல் பாலாஜி , யோகிபாபு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து உள்ளனர். இப்படம் தீபாவளிக்கு வர உள்ளது. இப்படம் கால்பந்து மையக்கமாக கொண்டு உருவாக்கப்பட்டு உள்ளது.
விஜயின் அடுத்த படம் என்ன என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இந்நிலையில் விஜயின் 64-வது படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு அறிவித்து உள்ளது. விஜயின் 64-வது படத்தை மாநகரம் திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார்.
இப்படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் இசையமைக்க உள்ளார்.இப்படத்தை எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் தயாரிக்க உள்ளது.இப்படம் 2020 கோடை கொண்டாட்டமாக திரைக்கு வரும் எனவும் , இப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற அக்டோபர் மாதம் தொடங்க திட்டமிட்டு இருப்பதாக படக்குழு அறிவித்து உள்ளது.