தலைவி ஜெயலலிதாவாக மாறுவதற்கு லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றுள்ள கங்கனா ரனாவத்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை பலரும் பல விதங்களில் படமாக்கி வருகின்றனர். அதில் இயக்குனர் விஜய், தற்போது மிக வேகமாக செயல்பட்டு வருகிறார். விரைவில் இப்படத்தை இயக்கவுள்ளார். ஜெயலிதாவாக வேடத்தில் நடிப்பதற்கு பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தேர்வாகியுள்ளார்.
இந்த படத்தில் கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாக நான்கு கெட்டப்புகளில் நடிக்க உள்ளார். அதற்காக தத்ரூபமாக இருக்க பிரஸ்தடிக் மேக்கப் செய்ய உள்ளார். அதற்காக தற்போது படக்குழு கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் செல்ல உள்ளார்களாம். அங்கு ஹாலிவுட் படத்திற்கு பிரஸ்தடிக் மேக்கப் செய்த ஜேசன் என்பவர் இதற்கான பணிகளை செய்ய உள்ளார்.
இந்த பிரஸ்தடிக் மேக்கப் சீதக்காதி, இந்தியன் 2 ஆகிய படங்களில் பயன்படுத்தப்பட்டு கெட்டப் தத்ரூபமாக காண்பிக்கப்பட்டிருக்கும்.
லேட்டஸ்ட் செய்திகள்
இன்று இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…வெப்பநிலை இப்படிதான் இருக்கும்! வானிலை மையம் தகவல்!
April 5, 2025
‘தமிழ்நாட்டில் கால் வை பார்க்கிறேன்’..எச்சரித்த வைகோ…பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்!
April 5, 2025