மறைந்த ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு தலைவி படத்தினை ஏப்ரல் 23-ம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகும் திரைப்படம் தலைவி .ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடித்துள்ளார் .
விஷ்ணுவர்தன் இந்தூரி, சைலேஷ் ஆர்.சிங் தயாரிப்பில் உருவாகும் ‘தலைவி’ திரைப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார் .மேலும் இந்த திரைப்படத்துக்கு பாகுபலி பட கதாசிரியரான கே.வி.விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் பல முக்கிய பிரபலங்கள் நடிக்கும் இந்தப் படத்தில் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமி நடித்துள்ளார் . படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்துள்ள இந்த படத்தின் ஸ்டில்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் நேற்று முன்னாள் முதல்வரும் ,நடிகையுமான ஜெயலலிதா அவர்களின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு தலைவி படக்குழுவினர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக அறிவித்திருந்தார்கள் . அதன்படி தலைவி ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகியுள்ள தலைவி படத்தினை வரும் ஏப்ரல் 23-ம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை : மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையின் ஒரு பகுதியில் இந்து மத கடவுள் முருகன் கோயில், காசி விஸ்வநாதர்…
சென்னை : சென்னையில் நேற்று 1 சவரன் ரூ.680 குறைந்து ரூ.61,640க்கு விற்பனையான நிலையில், இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது.…
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. ஈரோடு கிழக்கு…
சென்னை : சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் பனி மூட்டம் நீடிக்கும் என சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் இறுதி டி20 போட்டியின் போது, சஞ்சுவுக்கு காயம்…
மன்பிஜ் : சிரியாவின் மன்பிஜ் நகரில் நேற்று மதியம் வெடிகுண்டு நிரப்பப்பட்டிருந்த கார் வெடித்து சிதறியதில், அதன் அருகே இருந்த…