தலைவர் 169 படப்பிடிப்பு எங்கு, எப்போது தொடங்குகிறது தெரியுமா.?
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக தனது 169-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய திரைப்படங்களை இயக்கிய நெல்சன் இயக்குகிறார்.
இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்நிலையில். தற்போது இந்த திரைப்படம் குறித்து கிடைத்த தகவல் என்னவென்றால், இந்த படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற மே மாதம் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளதாகவும், அதன்பிறகு சென்னையில் வைத்து படமாக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் மற்றொரு தகவல் என்னவென்றால், இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க நடிகை ஐஸ்வர்யா ராய்யிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு ஐஸ்வர்யா ராய் எந்திரன் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் விஜய் வைத்து பீஸ்ட் படத்தை இயக்கி முடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.